என்னை பாதித்த வேதனை அடைய செய்தி
- raghuldrag
- Aug 5, 2015
- 1 min read
நம் தமிழ் தாயின் தலை மகன் எம் இந்திய நாட்டின் முதல் குடிமகன் என் உடன் பிறவா சகோதரன் திரு. கலாம் இழந்தது தவிக்கும் இந்த சூழ்நிலையில்

பல தொலைகாட்சிகள் அவரது இறப்பை பற்றி நொடிக்கு நொடி போட்டு கொண்டு தங்களுக்கு வியாபார ஆதாயம் பார்கிறார்கள் தவிர யாரும் அவரின் இழப்பை பற்றி உண்மையாக வருத்தம் அடைய வில்லை ! இவர்களுக்கு ஒரு கேள்வி ஒன்றை மட்டும் முன் வைகின்றேன்? * உங்களுடைய குடும்பத்தில் யாராவது இழந்தது இருக்கும் போது இப்படி வியாபார ஆதாயம் பார்பீர்களா? * அவர் இருக்கும் போது செய்த சாதனைகளை போட முன் வராத மூடர் கூடமே ,இப்பொழுது ஏன் அவரின் இறப்பை கொண்டு ஆதாயம் தேட வேண்டும் ? * மாணவர்களுக்கு என்று தன் கடைசி மூச்சு வரை வாழ்ந்த எம் சகோதரன் பற்றி பேச என்ன தகுதி உங்களுக்கு இருகின்றது ? * வாழும் பொழுது அவரின் பெருமைகளை உங்களுது செய்தி தாளில் குறு செய்தியை போட்ட நீங்கள் இப்பொழுது எங்கு இருந்து வந்தது இந்த தீடிர் பாசம் ? இவர்களின் செயல் பாட்டுக்கு யார் காரணம் ? நாம் தான் ! வறண்ட பூமியாக இருந்த சிங்கபூர் இன்று தொழில் நகரமா மாற்றிய திரு .லீ குவான் இறப்பின் பொது ஒட்டு மொத்த சிங்கபூர் குடிமகன்களும் தான் ஆற்ற வேண்டிய கடமை நோக்கி சென்றான் ,ஆனால் நாமோ எல்லா வற்றிலும் அரசியல் சாயங்கள் ,அடுத்தவர் பிழைகள் ,சினிமா மோகம், இப்படி தன்னை அறியாமல் வாழும் நம் கடமை புரியாமல் வாழும் வரை நாம் மற்றவர்களுக்கு ஏமாறும் காட்சி பொருளாய் தான் இருப்போம் ! உண்மையாய் நீ எம் சகோதரன் கலாமை நேசித்தல் அவர் போன்று நாட்டுக்கும் , நம் சமூகத்துக்கும் ஏதாவது செய் தமிழா ! தனி மனிதன் எப்படி வேண்டுமாலும் இருக்கட்டும் அவனால் இந்த சமூக பாதிக்காமல் இருப்பின் நல்லாது,யாருடைய காட்சி பொருளுக்கும் நீ பொம்மையை மாறி விடாதே !
Comments